நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? அவரது குழு வெளியிட்ட அறிக்கை

Anushka Shetty
By Kathick Mar 21, 2026 03:30 AM GMT
Report

முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, ஒரு கட்டத்தில் தனது மார்க்கெட்டை இழந்தார். தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இவர், திடீரென ஒருசில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணம் நடக்கப்போவதாக சமீபகாலமாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து அவரது குழு தற்போது மறுப்பு தெரிவித்திருக்கிறது.

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? அவரது குழு வெளியிட்ட அறிக்கை | Anushka Shetty Team Angry On Marraige Rumours

"ஒருவரது வாழ்க்கையை தலைப்பு செய்தியாக்கும் முன் அவரிடம் அந்த செய்தியை பற்றி கேட்டு உறுதி செய்து கொள்ளவாவது வேண்டும். எல்லா செய்திகளிலும் 44 வயது என்பதை தான் பெரிதாக பேசுகிறார்கள்.

அது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா. வயதை சொல்லி age shaming செய்கிறீர்கள். வயது தான் அவ்வளவு முக்கியம் என்றால் ஹீரோக்களின் வயது பற்றி அதே எனர்ஜி உடன் எழுதுங்கள். பெண்களுக்கு மட்டும் இப்படி செய்தி வருவது ஏன்" என காட்டமாக அனுஷ்கா டீம் கேட்டிருக்கிறது.  

Gallery