7 ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லை! அவரை அடிக்க பயந்தேன்! நண்பன் பட நடிகை அனுயா..

vijay nanban anuya sivamanasulasakthi anuya_y_bhagwat
By Edward Aug 07, 2021 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் சிலர் படவாய்ப்பில்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். பல ஆண்டுகள் அவர்களை பார்க்கும் போது அந்த படத்தில் நடித்தவர்களா? என்று ஆச்சரியமாக பார்ப்பார்கள். அப்படியாக மாறியவர் தான் சிவ மனசுல சக்தி படத்தில் நடித்த அனுயா.

மும்பை மாடலாக இந்தி சினிமாவில் அறிமுகமாகி பின் நடிகர் ஜீவாவின் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து ஒருசில படங்கல் தோல்வி கொடுத்த நிலையில், நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் இலியானாவின் மகளாக நடித்திருப்பார். அப்படத்தில் நடிகர் விஜய்யை அடித்த காட்சியை பற்றி சமீபத்திய பேட்டியொன்றில்,

அவ்வளவு பெரிய நடிகர் விஜய்யை சங்கர் சார் அடிக்க சொன்னபோது பயந்தேன். கொஞ்சம் சங்கடமாக இருக்கும் நிலையில் சங்கர் அது விஜய் கிடையாது படத்தின் கதாபாத்திரம் பாரி அதனால் அடிங்கள் என்று கூறிய பின் அந்த காட்சியை முடித்து கொடுத்தேன். அதற்கு விஜய் ஒன்றும் சொல்லவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் கடந்த 14 வருடங்களாக படவாய்ப்பில்லாமல் இருந்த அனுயா 2017 பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளாமர் போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.