தோனி, கபில் தேவிடம் மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்..இதான் காரணம்..

Kapil Dev MS Dhoni Indian Cricket Team Yuvraj Singh
By Edward Apr 03, 2026 10:27 AM GMT
Report

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ், கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையான விஷயங்களில் பேசி வருகிறார்.

தோனி, கபில் தேவிடம் மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்..இதான் காரணம்.. | Apologise To Ms Dhoni Kapil Dev Yuvraj Singh

1980 காலக்கட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் அணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், தன்னுடைய வாழ்க்கையையே அவர் சீரழித்துவிட்டதாகவும் நினைத்து கபில் தேவ் வீட்டிற்கே துப்பாக்கியோடு சென்றதாக யோகராஜ் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல், தன்னுடைய மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி சிரழித்துவிட்டதாக கூறியிருந்தார். இதற்கு யுவராஜ் சிங்கை, அணியிலிருந்து நீக்கியது தேர்வுக்குழுவின் முடிவுதான் என்றும் அதில் தோனிக்கு எந்த தனிப்பட்ட பங்கும் இல்லை என்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் விளக்கமளித்திருந்தார். இதன்பின் யோக்ராஜ், தோனியை புகழ்ந்து பேசி வந்தர்.

தோனி, கபில் தேவிடம் மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்..இதான் காரணம்.. | Apologise To Ms Dhoni Kapil Dev Yuvraj Singh

தோனி, கபில் தேவிடம் மன்னிப்பு

சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவராஜ், தன்னுடைய தந்தை மற்ற வீரர்களை பற்றி பேசியதை தான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் எம் எஸ் தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இப்படி தேவையில்லாமல் பேசுவது சரியில்லை என்று என்னுடைய தந்தியிடமும் நான் நேரடியாகவே கூறியுள்ளேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.