ஹனிமூன்ல கூட ஏ ஆர் ரகுமான் அதைதான் செய்தார்!! ஷாக் கொடுத்த சாய்ராவின் சகோதரி கணவர்..

Rahman A R Rahman Gossip Today Divorce
By Edward Nov 22, 2024 04:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

ஏ.ஆர் ரஹ்மான் - சாயிரா பானு

ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து உள்ளனர்.

1995ல் அவர்கள் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு கதிஜா, ரஹீமா என இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். கணவர் ஏ ஆர் ரகுமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சாய்ரா பானு விவாகரத்து பெற்று பிரிவதாக கூறி அதிர்ச்சியளித்தார்.

ஹனிமூன்ல கூட ஏ ஆர் ரகுமான் அதைதான் செய்தார்!! ஷாக் கொடுத்த சாய்ராவின் சகோதரி கணவர்.. | Ar Rahman Composed Music During His Honeymoon

இது குறித்து பலர் பலவிதமாக பேசி வரும் நிலையில், நடிகர் ரஹ்மான் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். சாய்ரா பானுவின் சகோதரியின் கணவரும் நடிகருமான ரஹ்மான் அளித்த பேட்டியொன்றில் ஹனிமூனுக்கு சென்ற இடத்திலும் மியூசிக் கம்போஸ் செய்தார் ஏ ஆர் ரஹ்மான் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஹ்மான்

அவர்கள் ஹனிமூன் சென்றிருந்த நேரத்தில் அவர்களுக்கு நான் போன் செய்தபோது நள்ளிரவு 12 முதல் 1 மணி இருக்கும். சாய்ரா பானு தூங்கிக்கொண்டிருந்த நிலையில், எழுந்து பதிலளித்தார். அப்போது ரஹ்மான் எங்கே என்று கேட்டபோது எனக்கு தெரியாது என்று சாய்ரா சொன்னார்.

அவர் மற்றொரு அறையில் வீணை வைத்துக்கொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டு கம்போசிங் செய்தார். அவர் அப்படிப்பட்ட நபர், அந்த அளவிற்கு மியூசிக் மீது தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் என்று நடிகர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.