ஏ ஆர் ரகுமான் விவாகரத்துக்கு காரணம் மோகினி டே-வா!! முற்றுப்புள்ளி வைத்த வழக்கறிஞர்..

A R Rahman Gossip Today Divorce
By Edward Nov 21, 2024 09:33 AM GMT
Edward

Edward

in Gossip
Report

ஏ.ஆர் ரஹ்மான் - சாயிரா

ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து உள்ளனர். 1995ல் அவர்கள் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு கதிஜா, ரஹீமா என இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் விவாகரத்துக்கு காரணம் மோகினி டே-வா!! முற்றுப்புள்ளி வைத்த வழக்கறிஞர்.. | Ar Rahman Saira Divorce Lawyer Stop Rumoured News

ஏ.ஆர்.ரஹ்மானுடன் வந்த பிரச்சனை காரணமாக சாயிரா தனியாக தான் வாழ்ந்து வந்திருக்கிறார். மனக்கசப்பு அதிகம் ஆனது, இடைவெளி தொடர்ந்து பெரிதாகி கொண்டே போனது என்றும், அதை சரி செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் தான் இந்த விவாகரத்து முடிவை இருவரும் எடுத்து இருக்கின்றனர்.

மோகினி டே விவாகரத்து

இது ஒரு பக்கம் இருக்க, ஏ ஆர் ரகுமானுடன் பல ஆண்டுகளாக துணை கிடாரிஸ்ட் ஆக பணியாற்றி வந்த மோகினி டே என்பவர் தன் கணவரை பிரிந்துவிட்டதாக கூறி செய்தியை வெளியிட்டார். ஏ ஆர் ரகுமான் விவாகரத்து அறிவித்து ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்கு மோகினி டே விவாகரத்து செய்தி அறிவித்தது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. இதனால் சமுகவலைத்தளங்களில் ஏ ஆர் ரகுமான் - சாய்ரா விவாகரத்துக்கு மோகினி டே தான் காரணம் என்று தகவல் பரப்பப்பட்டு வந்தது.

ஏ ஆர் ரகுமான் விவாகரத்துக்கு காரணம் மோகினி டே-வா!! முற்றுப்புள்ளி வைத்த வழக்கறிஞர்.. | Ar Rahman Saira Divorce Lawyer Stop Rumoured News

வழக்கறிஞர்

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல என்று ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா கூறியிருக்கிறார். இருவரும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அது ஒரு இணக்கமான விவாகரத்து, இருவரும் மிகவும் உண்மையானவர்கள், இந்த முடிவை எளிதாக எடுக்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் வந்தனா தெரிவித்துள்ளார்.