என்னடா இது பீஸ்ட் பாட்டுக்கு வந்த சோதனை? விஜய் டான்ஸை மிஞ்சும் டி.ஆர் குத்து..
vijay
beast
trajendar
arabickuthu
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பீஸ்ட் டிரைலருக்கு முன்பே பாடல்கள் மூலம் பிரமோஷனை ஆரம்பித்துவிட்டனர் படக்குழு.
அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் வரியில் அரபிக் குத்து பாடல் வெளியாகி மிகப்பெரிய சாதனை யூடியூப்பில் நிகழ்த்தியது.
பலர் பாராட்டினாலும் ஒருசிலர் பாடலை கிண்டல் செய்தும் வந்தனர். தற்போது டி ராஜேந்தரை வைத்து டி.ஆர் அரபிக் குத்து வெர்ஷன் என்று எடிட்டிங் செய்து வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.