அந்த நடிகைக்கு முத்தம் கொடுக்க மாட்டேன்! அரவிந்த் சாமியை வற்புறுத்திய இயக்குநர் மணிரத்னம்.. REWIND

maniratnam roja madhubala Arvind Swami
By Edward Sep 01, 2021 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜாக்லேட் பாய் என்ற பேர் பெற்று அதிக பெண் ரசிகர்களை ஈர்த்து வந்தவர்களில் ஒருவர் நடிகர் அரவிந்த் சாமி. தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் தம்பியாக நடித்து அறிமுகமாகினார். இதையடுத்து பேர் கொடுத்த படம் ரோஜா.

படத்தின் கதை பாடல், பின்னணி இசை, ஸ்கீர்ன்பிளே ஆகிய அனைத்தையும் அள்ளித்தூக்கினார் இயக்குநர் மணிரத்னம். இதையடுத்து வெற்றி படங்களையே கொடுத்த அரவிந்த் சாமி தனி ஒருவன் படத்தில் நடித்து மீண்டும் தன் இடத்தினை பிடித்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் தலைவி படத்தில் எம்ஜிஆராக நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் ரோஜா படத்தில் நடந்த ஒரு நிகழ்வு சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் நடிகைகளுடன் பழகவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் தயக்கம் காட்டி வந்துள்ளார் அரவிந்த் சாமி.

ரோஜா படத்தில் நடிகை மதுபாலாவிற்கு இருக்கியபடி முத்தம் கொடுக்கும் காட்சி இருக்கும். 21 வயதில் அப்படத்தில் நடித்த அரவிந்த் சாமி, அந்த காட்சியை நடித்து கொடுக்கமாட்டேன் என்று வெட்கப்பட்டு விலகி நின்றாராம். பின் இயக்குநர் மணிரத்னம் சமாதானப்படுத்திய பிறகு தான் அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளாராம் அரவிந்த் சாமி.