திருமண வயதில் மகன்.. 56 வயதில் மறுமணம் செய்த நடிகர்

Marriage
By Yathrika Dec 25, 2023 01:30 PM GMT
Report

அர்பாஸ் கான்

பாலிவுட் சினிமாவில் திருமணமே செய்யாமல் 57 வயதிற்கு மேலும் சிங்கிளாகவே உள்ளார் சல்மான் கான். அப்படி இவரது குடும்பத்தில் இருந்து ஒரு நபர் தனது 56 வயதில் மறுமணம் செய்துள்ளார். 

சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர். 56 வயதாகும் இவருக்கு செப்டம்பர் 24ம் தேதி காதலி ஷுரா என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்தது.

இவர்களது திருமணத்திற்கு குறிப்பிட்ட பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்துகொண்டனர். அவர்களது திருமண புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதில் அர்பாஸ் கான் தனது மகனுடன் எடுத்த போட்டோவை வெளியிட அவருக்கே திருமண வயது இருக்கும் போல் தெரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

திருமண வயதில் மகன்.. 56 வயதில் மறுமணம் செய்த நடிகர் | Arbaaz Khan Second Marriage Photo