பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் அர்ஜுன்.. பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் விவரம்

Arjun Blast
By Karthick Raja Jun 03, 2026 08:00 AM GMT
Report

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட். இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் அர்ஜுன்.. பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் விவரம் | Arjun Blast Movie Box Office Collection

இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், எதிர்பார்ப்புடன் திரையில் பிளாஸ்ட் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான திரைப்படமாக பிளாஸ்ட் அமைந்தது. ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் அர்ஜுன்.. பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் விவரம் | Arjun Blast Movie Box Office Collection

இந்த நிலையில், 6 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 34 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.