No Marriage-ன்னு சொன்ன அர்ஜுன் தாஸ்.. காதலியுடன் இப்படியொரு ரொமான்ஸ்!! வைரல் புகைப்படங்கள்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான கைதி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார் அர்ஜுன் தாஸ்.
கைதி படத்தில் "லைஃப் டைம் செட்டில்மெண்ட்" என்று டயலாக் டெம்ப்ளடாக மாறிவிட்டது. இதனை அடுத்து மாஸ்டர், அந்தகாரம், புட்ட பொம்மா, அநீதி, போர், ரசவாதி உள்ளிட்ட பல படங்களில் மிரட்டியுள்ளார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் ஏற்கனவே ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இருவரும் காதலிப்பதாக தகவல் பரவின, ஆனால் அது ஒரு படத்திற்கான புரமோஷன் என தெரியவந்தது.
இந்நிலையில் அர்ஜுன் தாஸ்,தனது காதலியின் முகத்தைக் காட்டாமல் மலை பிரதேசத்தில் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள், அர்ஜுன் தாஸ் உங்கள் காதலி யார்? என்றும் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
You May Like This Video
