நடிகர் அர்ஜுனின் சர்வைவர் நிகழ்ச்சியில் விஷாலின் அண்ணியா? லீக்கானது போட்டியாளர்களின் லிஸ்ட்..

Contestants television arjun Survivor sriyareddy
By Edward Aug 12, 2021 03:21 AM GMT
Report

இந்திய தொலைக்காட்சியில் தற்போது ஹாலிவுட் நிகழ்ச்சிகளை மையமாகவைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியும் இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடந்து வருகிறது. தமிழில் நடிகர் கமல் 5வது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக பிரபல தொலைக்காட்சிசேனல் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்த திட்டமிட்டுள்ளது. தனித்தீவில் 18 போட்டியாளர்கல் 90 நாட்கள் நடத்தும் கடுமையான போட்டிகளை சந்திப்பதுதான். அந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஹுன் தொகுத்து வழங்கப்போவதாக தொலைக்காட்சி சேனல் அதிகாரபூர்வ அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிட்டது.

தற்போது யார் யார் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. தற்போது அந்த நிகழ்ச்சி இந்த பிரபலங்கள் தான் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் இடத்தில் பேசப்படுபவர், நடிகை விஜயலட்சுமி. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் தற்போது இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, விஷாலில் அண்ணியான நடிகை ஸ்ரேயா ரெட்டியும் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விக்ரத், நடிகை சஞ்சனா சிங், நடிகர் ரோபா சங்கரின் மகள் இந்திரஜா, நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸும், சீரியல் நடிகர் அக்‌ஷய் கமல், நடிகை சாக்‌ஷி அகர்வால், நடிகை பிரகதி, விஜே பூஜா அகர்வால், நடிகை சாயா சிங், மிஸ் இந்தியா கோபினாத், நடிகை ஸ்ரீரெட்டி போன்றவர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த லிஸ்ட் அதிகாரபூர்வமாக இன்னும் கூறப்படவில்லை.

இது குறித்து கூடியவிரைவில் தொலைக்காட்சி சேனல் போட்டியாளர்களின் லிஸ்ட்டை வெளியிடுவார்கள் என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.