அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா!! சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்

Arvind Swamy Gossip Today Businessman Tamil Actors
By Edward Jul 06, 2023 02:45 PM GMT
Report

90-களில் இளசுகளின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் அரவிந்த்சாமி. இவர் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தளபதி, இந்திரா, ரோஜா, பாம்பே எனப் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார்.

சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். அரவிந்த் சாமி பிரபல தொழிலதிபரின் தத்து மகன் என்று பரவி வந்தாலும் அதுகுறித்து உண்மையான தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தனிப்பட்ட மற்றும் மனைவியுடன் விவாகரத்து பிரச்சனையால் சினிமாவில் இருந்து 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு விலகினார். தந்தை வி டி சுவாமி நடத்தி வந்த கம்பெனிகளை நடத்தி வந்த அரவிந்த் சுவாமி, 2005 ஒரு விபத்தில் சிக்கி முதுகுதண்டில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

4, 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று குணமடைந்து பல தொழில் துறை கம்பெனிகளான, InterPro Global, Talent Maximus துவங்கி நடத்தி வந்தார்.

Talent Maximus கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு 3300 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் சம்பாதிப்பில் சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு 10 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.