குறையாத அழகு!! 27 வயதான ஆர்யா மனைவி நடிகை சாயிஷாவின் புகைப்படம்..

Arya Sayyeshaa Indian Actress Tamil Actress Actress
By Edward Nov 15, 2024 02:30 PM GMT
Report

நடிகை சாயிஷா

நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005ல் வெளியான படம் கஜினி. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் 10 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் அகில் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை சாயிஷா.

இப்படத்தினை தொடர்ந்து ஜெயம் ரவியின் வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கஜினிகாந்த் படத்தின் போது நடிகர் ஆர்யா மீது காதல் ஏற்பட்டு 2019 மார்ச் 10ல் திருமணம் செய்தார் சாயிஷா.

குறையாத அழகு!! 27 வயதான ஆர்யா மனைவி நடிகை சாயிஷாவின் புகைப்படம்.. | Arya Wife Actress Sayyeshaa Latest Photos

கிளாமர் லுக்

சினிமாவில் இருந்து சற்று விலகிய சாயிஷா கடந்த 2021ல் ஆரியானா என்ற மகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். அதன்பின் ஆர்யாவுடன் டெட்டி படத்தில் நடித்தார். திருமணத்திற்கு பின் தன் கணவரின் அனுமதியுடன் பத்து தல படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டு ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் நடனமாடி வீடியோவையும் பகிர்ந்து வருகிறார். தற்போது பல நாட்களுக்கு பின் கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

Gallery