நீண்ட நாள் காதலியுடன் திருமணம்!! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்..
ஆஷ்லே கார்ட்னர்
ஆஸ்திரேய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான அஷ்லே கார்ட்னர், நீண்டகாலமாக மோனிகா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
சமீபத்தில் நிச்சயம் செய்திருந்த நிலையில் தன் பாலின ஈர்ப்பாளரான மோனிகாவுடன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
காதலியுடன் திருமணம்
மகளிர் ப்ரீமியர் போட்டிகளில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஆஷ்லே கார்ட்னர் - மோனிகா திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான அலிசா ஹீலி, எல்லிஸ் பெர்ரி, கிம் கார்த் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
2017ல் சர்வதேச போட்டியில் அட ஆரம்பித்து இதுவரை 7 டெஸ்ட், 77 ஒரு நாள், 96 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஆஷ்லே கார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிகாவுடன் ஆஷ்லே கார்ட்னர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

