சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் நெருக்கம்!! மன்மத லீலை நடிகருடன் காதலில் இருந்த நடிகைகள்...
தமிழில் சூதுகவ்வும், பிட்சா 2, தெகிடி போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அசோக் செல்வன். அதன்பின் சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருத்தன், சில சமயங்களில் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் ஓ மை கடவுளே, மன்மத லீலை, ஹோஸ்டல் போன்ற படங்கள் அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய கேரியரை கொடுத்திருந்தது. தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளரின் மகளுடன் காதலில் இருந்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் நண்பர்கள் தான் என்றும் கூறி முற்றுப்புள்ளி வைத்தனர். அதன்பின் நடிகை பிரியா ஆனந்துடன் காதலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது ஆக்டர் கம் பிரொடியூசரின் மகளுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
தயாரிப்பாளரின் மகள் சில படங்களில் நடித்து வருகிறாராம். அந்த நடிகை நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் என்று சிலர் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.