நயன்தாரா வேண்டாம் அந்த நடிகை தான் ஓகே!! சென்பி பட நடிகரை வம்பில் இழுத்துவிட்ட நடிகை ஷகீலா..
40 கதை அஸ்வின்
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் நடிகராக அறிமுகமாகி குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வின் குமார். சமீபத்தில் குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

சைட் ரோலில் நடித்து வந்த அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அதனால் மன கஷ்டத்தில் இருந்து வந்த அஸ்வின் அதிலிருந்து மீண்டும் மீட் கியூட் செம்பி போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்.
ஷகீலாவின் பேட்டி
சமீபத்தில் நடிகை ஷகீலாவின் பேட்டியில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளார் அஸ்வின் குமார். செம்பி படத்தின் வெற்றிக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறிய அஸ்வின், எனக்கு பல விசயங்களில் நீங்கள் (ஷகீலா) வந்து நிக்கிறீர்கள். அதற்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், தீபிகா படுகோனேவை பிடிக்கும் சொன்னது எதற்காக என்றதற்கு, கதைக்கு தீபிகா படுகோனே தேவைப்பட்டால் அவர்களுடன் நடிக்க ஆசை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழில் எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்றும் நயன் தாரா ஓகே வா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். குறிப்பிட்டு யாரையும் கூறமுடியாது கதைக்கு ஏற்ப யார் இருந்தாலும் ஓகே என்றும் சாய் பல்லவி சிறந்த நடிகை. அவருடன் நடிக்க ஓகே தான். அதற்கு ஷகீலா, அவர்களுடன் சீக்கிரம் நடிக்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இன்று வரை யாரையும் காதலிக்கவில்லை, கேரியர் தான் முதலில் நல்ல ஒரு இடத்தில் வர ஆசை அதன்பின் தான் அதெல்லாம் என்று கூறியிருக்கிறார் அஸ்வின்.