அஜித்துடன் எல்லைமீறிய பிகினி ஆடை!! பிரபல நடிகையின் வாய்ப்பை தட்டித்தூக்கிய நயன் தாரா..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருபவர் நடிகை நயன் தாரா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நயன், அஜித்துடன் அசல், பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
அப்படி இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007ல் அஜித், நயன் தாரா, நமீதா, சந்தானம், பிரபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது பில்லா படம்.
இப்படத்தில் நடிகை நயன் தாரா இதுவரை இல்லாத அளவிற்கு பிகினி ஆடையில் உச்சக்கட்ட காட்சிகளில் நடித்து மிரளவைத்திருப்பார்.
ஆனால் நயன் தாராவுக்கு முன்னதாக பிரபல நடிகை அசின் தான் நடிக்கவிருந்தாராம். முதல் சாய்ஸ்-ஆக அசினிடம் கேட்கப்பட்டு சில காரணத்தால் அசின் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
அப்படத்திற்காக நடிகை அசின் எடுத்த டெஸ்ட் ஷூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் நயன் தாரா அளவிற்கு கிளாமர் ஆடையில்லை. அதனால் தான் அசின் இப்படத்தில் நடிக்காமல் போனார் என்று சிலர் கூறி வருகிறார்கள்.