நான் தான் ஸ்வேதா புருஷன்..கல்யாணத்தை மறைக்குறாங்க!! சீரியல் நடிகை மீது காதலர் புகார்...
நடிகை ஸ்வேதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகபெரிய வரவேற்பை பெற்று வரும் சின்ன மருமகள் சீரியலின் கதாநாயகி நடிகை ஸ்வேதா, கடந்த சில மாதங்களுக்கு முன், பிரபல சேனலுக்கு ஸ்வேதா, காதலர் என கூறி ஆதி என்பவர் பேட்டிக்கொடுத்தார். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் நான் யார் என்றே தெரியாது என்று சொன்னவர், தற்போது எதற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் தன்னுடைய கேள்விகளை இன்ஸ்டாகிராமில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் தான் ஸ்வேதா புருஷன்
மேலும் அவர் வெளியிட்ட வீடியோவால் வெளியில் தலைக்காட்ட முடியவில்லை, நான் ஒரு உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி சென்றாலும், இதை காரணம் காட்டி எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இருவரும் ஒரு ஷூட்டிங்கில் தான் சந்தித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு 3 வருடமாக காதலித்தப்பின் திருமணம் செய்துகொண்டோம்.

இத்தனை நாட்களாக என்மீது தான் தவறு என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் என் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. என் மனைவியால் நான் பாதிக்கப்பட்டதைவிட ஒரு பெண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி பேசுவதற்காக நான் ஸ்வேதாவிடம் பலமுறை முயற்சித்தேன், ஆனால் அவர் என் அழைப்பை ஏற்கவேயில்லை. இதற்கு மேலும் சும்மா இருக்கக்கூடாது என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன். என்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஆதி.