நயன் - விக்கி பிரிவு உறுதி.. சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர் கூறியது இதுதான்..

Nayanthara Samantha Naga Chaitanya Vignesh Shivan Astrology
By Edward Jan 17, 2024 02:30 AM GMT
Report

தென்னிந்திய நடிகைகளின் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விக்னேஷ் சிவனை 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நயன் - விக்கி பிரிவு உறுதி.. சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர் கூறியது இதுதான்.. | Astrology Venu Swamy Open Nayanthara Vikki Divorce

திருமணம் செய்து நான்கு மாதங்களுக்கு பிறகு இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றார். அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய முன்னேற்றத்திற்கு தன் கணவர் விக்னேஷ் தான் காரணம் என்று கூறி வந்தார்.

தற்போது ஜோதிடர் வேணு சாமி என்பவர், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் பிரிவார்கள் என்றும் அது நடக்கவில்லை என்றால் ஜோதிடத்தை விட்டு விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். இவர் இப்படி பேசியது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

நயன் - விக்கி பிரிவு உறுதி.. சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர் கூறியது இதுதான்.. | Astrology Venu Swamy Open Nayanthara Vikki Divorce

இதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணத்தின் போது இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று வேணு சுவாமி கூறியிருந்தார். தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் விஷயத்திலும் இப்படி கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.