மனைவி அதியா கர்ப்பம்!! அப்பாவாகப்போகும் இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்..
Rahul Dravid
Pregnancy
Indian Actress
Indian Cricket Team
ICC Champions Trophy
By Edward
கே எல் ராகுல்
இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா கேப்டன்ஸியில் சாம்பியன்ஸ் டிராஃபி 2025 கோப்பையை கைப்பற்றினர். இப்போட்டியில் கே எல் ராகுலும் சிறப்பாக விளையாடி கோப்பையுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தார்.
கே எல் ராகுல், நடிகையும் பிரபல நடிகர் சுனில் செட்டியின் மகளுமான அதியா செட்டியை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
கடந்த 2023ல் இருவருக்கும் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் பிரம்மண்டமான முறையில் திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து மனைவியுடன் நேரத்தை செலவிட்டு அவுட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து வந்தார்.
அதியா கர்ப்பம்
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையை வென்ற கையோடு மனைவி அதியா செட்டி கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.
கர்ப்பகாலத்தில் மனைவியுடன் கே எல் ராகுல் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.



