உருவ கேலி செய்த தொகுப்பாளர்.. சரியான பதிலடி கொடுத்த அட்லீ
அட்லீ
ஷங்கரின் உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது தென்னிந்தியாவை தாண்டி வட இந்திய பிரபலங்களும் எதிர்ப்பார்க்கும் ஒரு இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் தடம்பதித்துவிட்டார். ஹிந்தியில் இவர் இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அடுத்து சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்க போகிறார். மேலும் அட்லீ தற்போது பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தை தயாரித்து இருக்கிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இந்த படம்.
படம் இந்த மாதம் வெளிவர உள்ள நிலையில், ஹிந்தியில் பிரபல டிவி ஷோவான கபில் சர்மா ஷோவுக்கு அட்லீ மற்றும் பேபி ஜான் படக்குழுவினர் படத்தை ப்ரொமோட் செய்ய சென்றுள்ளனர்.
பதிலடி
அப்போது அட்லீயின் தோற்றம் பற்றி கபில் சர்மா கிண்டல் செய்யும் வகையில் பேசி இருக்கிறார். அதற்கு அட்லீ, " நான் ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு தான் நன்றி கூற வேண்டும் ஏனென்றால் என் முதல் படத்தை அவர் தான் தயாரித்தார்.
அப்போது எனது லுக் பற்றி அவர் கவலைப்படவில்லை, நான் கதை சொன்ன விதத்தை தான் அவர் பார்த்தார். தோற்றத்தை வைத்து எடைபோட கூடாது. மனம் எப்படி இருக்கிறது என பார்த்து எடைபோடுங்கள் என அட்லீ பதிலடி கொடுத்து இருக்கிறார்.
Kapil Sharma subtly insults Atlee's looks?
— Surajit (@surajit_ghosh2) December 15, 2024
Atlee responds like a boss: Don't judge by appearance, judge by the heart.#Atlee #KapilSharma pic.twitter.com/oSzU0pRDS4