அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா, லேட்டஸ்ட் அப்டேட்
Allu Arjun
Atlee Kumar
By Kathick
அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் AA22 x A6. இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இதுவரை இப்படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், மிருணால் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் கதாநாயகிகளாக கமிட் ஆகியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அறிவிப்பு இதுகுறித்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 800 கோடி என கூறப்படுகிறது.