தோல்வியை தழுவிய அயலான்.. சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு நிலைமையா?
Sivakarthikeyan
Actors
Tamil Actors
Ayalaan
By Dhiviyarajan
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் கடந்த 12 -ம் தேதி வெளியானது.
இப்படத்தில் ரகுல் ப்ரீதி சிங், இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ஹாலிவுட் டெம்ப்ளேட்டில் இருக்கிறது என்று விமர்சனம் எழுந்தாலும் குழந்தைகளுக்கு மகிழ்விக்கும் வகையில் இருக்கிறது என்று கோலிவுட் ரசிகர்கள் கூறினார்கள்.
இதனால் அயலான் திரைப்படம் தமிழ் நாட்டில் வசூல் வாரி குவித்தாலும், கேரளாவில் இப்படம் படு தோல்வியை சந்தித்து உள்ளதாம்.
அங்கு உள்ள ரசிகர்களுக்கு அயலான் திரைப்படம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.