இமான் பிரச்சனைக்கு பின் வெளிவந்த சிவகார்திகேயனின் அயலான் திரைப்படம்!! வெறுக்கப்பட்டதா?ரசிக்கப்பட்டதா?
குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன்.
விஜய்க்கு அடுத்தபடியாக இவருக்கு தான் அதிக குழந்தை ரசிகர்கள். இப்படி சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கும் சமயத்தில் சிவகார்த்திகேயனின் தலையில் இடியை இறக்கினர் இமான். அந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக சென்றது குறிப்பிடத்தக்கது.
இமான் பிரச்சனையால் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் பாதிக்கப்படும் என்று சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான அயலான் திரைப்படம் இன்று வெளியானது. தற்போது படத்தை பார்த்தவர்கள் என்னென்ன விமர்சனம் முன்வைத்து வருகின்றனர் என்பதை பார்க்கலாம் வாங்க..
ஹாலிவுட் தரத்தில்..சொல்லப்போனால் ஹாலிவுட் படத்தை கொஞ்சம் பிசுறு தட்டி படத்தை அப்படியே எடுத்து வைத்து இருக்கின்றனர் என்கின்றனர் சிலர்.
VFX காட்சிகள் படத்தில் அருமையாக எடுக்கப்பட்டு இருக்கிறதாம். தமிழில் இனி வரும் ஏலியன் படத்திற்கு இது முன்னோடியாக இருக்கும் என்பது சினிமா ரசிகர்களின் கருத்து.
ட்ரைலர் பார்த்துவிட்டு ஓவர் Expectation -னில் செல்லாமல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் படம் பிடிக்கும் என்றும் ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Overall - அயலான், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படம்..