சிவாவை கடத்திய வர்மா.. காதலை சொன்ன அயலிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. சனிக்கிழமை எபிசோடில் கபிலன் சில விஷயங்களை அறிந்து கொண்டிருப்பதாக சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்று குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வர்மாவை மடக்கி பிடிக்க Ad தலைமையில் ஒரு குழு அமைத்திருப்பதாகவும் இந்த ஆபரேஷனுக்கு பெயர் வர்மா எனவும் சொல்ல வருமா இதைக் கேட்டு சிரிக்கிறான்.

மறுபக்கம் அயலி ரூமுக்குள் இருக்க அங்கு வந்த பல்லவி சிவாவுக்கு என்ன கலர் பிடிக்கும் சொல்லு நானும் அதே கலர்ல டிரஸ் போடுறேன் அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல அயலி கடுப்பாகி பல்லவி கழுத்தில் கையை வைத்து இன்னொரு முறை இப்படி ஏதாவது பண்ணா கொன்னுடுவேன் என மிரட்டுகிறாள்.
பல்லவி பயப்படாத நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் தான் சிவா உன்னைத்தான் ரொம்ப அதிகமா காதலிக்கிறான் என்று சொல்ல அயலி சந்தோஷத்தை படுகிறாள். அயலி நானும் சிவாவை காதலிப்பதாக சொல்கிறாள்.

பிறகு வீட்டில் உள்ள எல்லோரும் மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு கிளம்பி செல்ல இந்திராணியையும் அழைக்க பாவையை பார்த்துக் கொண்டே வீட்டிலேயே இருப்பதாக சொல்லி விடுகிறார். பிறகு பல்லவி சிவாவுக்கு போன் செய்து அயலியின் காதல் குறித்து சொல்ல சிவா சந்தோஷத்தில் ரோட்டிலேயே டான்ஸ் ஆடுகிறான்.
அடுத்ததாக எல்லோரும் கோவிலுக்கு வர அஞ்சலி சிவாவை காணவில்லையே என்று தேட அப்போது வர்மாவிடமிருந்து ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலில் உன்னோட SV-ஐ தூக்கிவிட்டதாக சொல்ல அயலி அதிர்ச்சி அடைகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.