அயலி சீரியல் அப்டேட்: ரித்திகாவின் உண்மையை அம்பலப்படுத்திய சிவா; வீட்டில் வெடித்த புது பிரச்சினை!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், ரித்திகாவின் உண்மையான முகத்தை சிவா அம்பலப்படுத்தியதால் வீட்டில் பெரிய பிரச்சினை வெடித்துள்ளது.
ரித்திகாவை அடித்த சிவா!
வீட்டிற்குள் கோபமாக வந்த சிவா, ரித்திகாவை அழைத்து அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான். இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, எதற்காக அவளை அடிக்கிறாய் என்று கேட்கின்றனர். அப்போது, நமக்கு எதிராக நடந்த மோனிகாவின் சதியில் ரித்திகாவுக்கு தான் தொடர்பு இருக்கிறது என்பதற்கான ஆதாரம் கிடைத்து விட்டதாகவும், தான் செய்த தவறை மறைக்க அந்தப் பழியை அயலி மீது போட்டு விட்டதாகவும் சிவா கூறுகிறான்.

ஆனால், உண்மை தெரிந்த பிறகும் ரித்திகா கொஞ்சம்கூட பயப்படாமல், “ஆமாம், நான்தான் செய்தேன்” என்று திமிராகப் பேசுகிறாள். இதனால் குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சியடைகின்றனர்.
ரித்திகாவை வீட்டை விட்டு வெளியேற்ற முயன்ற செல்வநாயகி!
ரித்திகாவின் பேச்சைக் கேட்ட செல்வநாயகி கடும் கோபமடைகிறார். “என் வீட்டிலேயே இருந்துகொண்டு இந்திராணிக்கு கெட்ட பெயர் வாங்கித் தருவியா?” என்று கேட்டு அவளை அடிக்கிறார். மேலும், வீட்டை விட்டு வெளியேறும்படியும் கூறுகிறார்.

அப்போது குறுக்கிடும் இந்திராணி, கபிலன் இல்லாத நேரத்தில் ரித்திகாவை வீட்டை விட்டு அனுப்புவது சரியாக இருக்காது என்று கூறி தடுத்து நிறுத்துகிறார். வீட்டில் நடக்கும் இந்தப் பிரச்சினையைப் பார்த்து செல்லம், ஜமுனா உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் நிற்கின்றனர்.
இந்திராணி, அயலிக்கு வைர மோதிரப் பரிசு!
இதற்கிடையில், நடந்த பிரச்சினைகளுக்குப் பிறகு செழியன் அனைவருக்கும் டின்னர் ஏற்பாடு செய்கிறான். உணவகத்தில் இந்திராணி, அயலியிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்கிறார். தொடர்ந்து, இருவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வைர மோதிரங்களைப் பரிசாக வழங்குகிறார். இருவரும் மகிழ்ச்சியுடன் மோதிரங்களை மாற்றிக்கொள்கின்றனர்.
வர்மாவைத் தேடும் சிவா!
இதற்கிடையில், அதே உணவகத்திற்கு வரும் ஷீலாவைப் பார்த்த சிவாவுக்கு சந்தேகம் வருகிறது. ஷீலா இங்கே இருக்கிறாள் என்றால் வர்மாவும் இங்கேதான் இருக்க வேண்டும் என்று நினைத்து அவனைத் தேடத் தொடங்குகிறான்.
இந்திராணிக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அயலி வாஷ்ரூம் செல்வதாகவும், போன் பேசுவதாகவும் சொல்லிவிட்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக வர்மாவைத் தேடுகிறார்கள்.

இப்படிப் பல திருப்பங்களுடன் செல்லும் அயலி சீரியலில், சிவா வர்மாவைக் கண்டுபிடிப்பானா? ரித்திகாவின் அடுத்த திட்டம் என்ன? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளத் அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.