அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் நீச்சல் ஆடை போஸ்ட்..மலேசியா அவுட்டிங்...
கன்னடம், தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான மதுமிதா, தமிழில் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது அய்யனார் துணை சீரியலில் நிலா ரோலில் அனைவரையும் ஈர்க்கும் மதுமிதா, நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மதுமிதா
கர்நாடகத்தை சேர்ந்த மதுமிதா, கன்னட சீரியலான சனி, புட்மல்லி, ஜெய் ஹனும் உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானர். அதன்பின் தெலுங்கில் ஒருசில சீரியல்களில் நடித்தார்.
தமிழில் பிரியாத வரம் வேண்டும் என்ற தொடரில் அறிமுகமாகிய மதுமிதா, சன் தொலைக்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2வது பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் நடிக்காமல் போனார்.
இதனையடுத்து விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய மதுமிதா, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் அய்யனார் துணை சீரியலில் நிலா ரோலில் நடித்து வருகிறார். சீரியலில் அடக்கவுடக்கமாக காணப்படும் மதுமிதா, ரியல் வாழ்க்கையில் மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார்.
தற்போது மலேசியாவுக்கு சென்றுள்ள மதுமிதா, Langkawi தீவிற்கு சென்று அங்குள்ள பீச்சில் நீச்சல் ஆடையணிந்து எடுத்த வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.