இனியாவை அடிக்க கைநீட்டிய ராதிகா!! அடுத்த ஆப்பை சமாளிக்க காத்திருக்கும் கோபி..
விஜய் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யா என்ற கதாபாத்திரத்தினை மையப்படுத்தி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பாக்யாவின் கணவர் ராதிகாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தன்னுடைய வீட்டிற்கு எதிராகவே கோபி குடும்பம் நடத்தி வருகிறார்.
இனியாவும் தாத்தாவும் எப்படியாவது கோபியை புரிய வைக்க பல பிளான்களை செய்து வருகிறார்கள்.
அப்படி பாக்யா அவர்கள் குடியிருக்கும் இடத்தில் செக்ரட்ரி தேர்தலில் போட்டியிட ராதிகாவை அவருக்கு போட்டியாக கோபி களமிறக்குகிறார். ஒருவழியாக தேர்தல் முடிந்து 500 வாக்குகளுடன் ராதிகாவும் 1000த்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று பாக்யா வெற்றிப்பெறுகிறார்.
இதனை தொடர்ந்து இன்று இனியாவை ராதிகா எதற்கோ கை நீட்ட, அதற்கு இனியா என் அப்பாவே என்னை அடித்ததில்லை நீங்க யாரு பாத்து இருந்துக்கோங்க என்று வார்னிங் செய்து கோபத்துடன் கிளம்புகிறார். இந்த விசயத்தை நினைத்து ராதிகா என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துள்ளார்.