தொலைக்காட்சியை விட்டு தொடர்ந்து வெளியேறும் சீரியல் நடிகைகள்! இந்த லிஸ்ட்டில் பாக்யாவுமா?
பிரபல தொலைக்காட்சி செனலான விஜய் டிவியில் பணியாற்றி வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று சென்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிவகார்த்திகேயனில் ஆரம்பித்து குக்வித் கோமாளி புகழ் வரை சினிமாவில் நல்ல இடத்தினை பெற்று வருகிறார்கள்.
அப்படி மிகப்பெரிய பங்காற்றி வரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சமீபகாலமாக நடித்து வரும் சீரியல் நட்சத்திரங்கள் வெளியேறி வருவது அதிகரித்துள்ளது. பாரதி கண்ணாம்மா சிரியலில், ரோஷினி ஹரிபிரியன், ஆர்யன், கண்மணி மனோகரன், ரச்சித்தா மகாலட்சுமி, ராஜு, ஆலியா மானசா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விலகி வந்துள்ளனர்.
இதில் சிலர் மற்ற தொலைக்காட்சிக்கு தாவியும் உள்ளனர். இந்நிலையில் பாக்யலட்சுமி சீரியலில் பாக்யா ரோலில் நடித்து வரும் நடிகை சுஜித்ரா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் இவர் ஏன் விலகவுள்ளார் என்று இணையத்தில் ரசிகர்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து சுஜித்ரா இன்ஸ்டாகிராம் பதிவில் உண்மையை கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நான் சீரியலில் இருந்து விலகவில்லை. தற்போது ஷூட்டிங்கில் தான் இருக்கிறேன். சீரியலுக்கான பிரமோஷன் வேலை சென்று கொண்டிருக்கும் போது நான் ஏன் சீரியலை விட்டு விலகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.