பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பாக்யலக்ஷ்மி மருமகள்.. அட இவரா
Vijay Sethupathi
Bigg Boss
Serials
Baakiyalakshmi
Tamil TV Serials
By Karthick Raja
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி துவங்கவுள்ளார்.
இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் கூட சமீபத்தில் வெளிவந்தது. மேலும் விரைவில் துவங்கவுள்ள பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகளாக நடித்து வரும் நடிகை அக்ஷிதா அசோக் பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது என சொல்லப்படுகிறது.
அதே போல் பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகன் அருண், குரேஷி, அமலா சாஜி, ரஞ்சித், பப்லு உள்ளிட்டோரும் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
