ராதிகாவிடம் வழிந்து வழிந்து பேசும் கோபி!! இந்த விசயத்தில் கோட்டையை விட்டுட்டாரே..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகளில் கஷ்டங்களை எடுத்து வைத்து வரும் இந்த சீரியலில் கோபி பாக்யாவை விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து தனிக்குடுத்தனம் செய்து வருகிறார்.
அம்மா மீது இருந்த கோபத்தில் கோபியை தேடி இனியாவும் தாத்தாவும் அவர்கள் வீட்டில் இருந்து வருகிறார்.
இனியாவுக்கு ராதிகாவுக்கும் இடையில் சண்டை வந்தாலும் சீரியலை ரசிகர்கள் ரசிக்கும் படி தற்போது சென்று கொண்டிருக்கிறது.
அப்படி ஆசை ஆசையாய் குடும்பத்தினருக்கு ராதிகா பிரியாணி செய்து வைத்து அவர்களின் பாராட்டுக்காக காத்திருக்கிறார்.
சாப்பிட்ட அனைவரும் எதுவும் கூறவில்லை. கோபியோ எந்த கடை பிரியாணி நல்லா இருக்கு என்று ராதிகாவின் கனவில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்.
கோபி பாராட்டாமல் இருந்ததை பார்த்த தாத்தா, 25 வருசம் ஒருத்தி சமைச்சி போட்டிருக்கா. ஆனால் ஒரு முறைக்கூட நல்லா இருக்குன்னு சொன்னதில்லை. உனக்கு மட்டும் சொல்லுவானா என்ன? அவரசரப்பட்டிட்டியேம்மா என்று கூறி செல்கிறார்.
இதற்கு, என்னதான் கோபி ராதிகாவிடம் வழிந்து வழிந்து காதலித்து கல்யாணம் பண்ணாலும் இதை மட்டும் கோபி செய்துவிடுவாரா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.