பதிலடி கொடுத்த பாக்யா! கோபியால் அவமானத்தில் முழித்த இரண்டாம் மனைவி ராதிகா
விஜய் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி.
பாக்யா என்ற கதாபாத்திரத்தினை மையப்படுத்தி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பாக்யாவின் கணவர் ராதிகாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தன்னுடைய வீட்டிற்கு எதிராகவே கோபி குடும்பம் நடத்தி வருகிறார்.
இனியாவும் தாத்தாவும் எப்படியாவது கோபியை புரிய வைக்க பல பிளான்களை செய்து வருகிறார்கள். அப்படி பாக்யா அவர்கள் குடியிருக்கும் இடத்தில் செக்ரட்ரி தேர்தலில் போட்டியிட ராதிகாவை அவருக்கு போட்டியாக கோபி களமிறக்குகிறார்.
ஒருவழியாக தேர்தல் முடிந்து 500 வாக்குகளுடன் ராதிகாவும் 1000த்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று பாக்யா வெற்றிப்பெறுகிறார்.
சிவனேன்னு இருந்தவளை இப்படி ஆக்கிட்டிங்களே என்று ராதிகா கோபியிடம் இந்த வாரம் முழுவதும் கோபப்பட்டு கத்தவுள்ளார் என்பது இந்த வார எபிசோட்.
வாழ்த்துகள் பாக்கியா.. ?
— Vijay Television (@vijaytelevision) December 13, 2022
பாக்கியலட்சுமி - இப்பொழுது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/F10sbXbHAe