எங்களுக்கே விபூதி அடிக்கிறீயா? பாக்யலட்சுமி கோபி லீலை மீம்ஸ்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையப்படுத்தி ஒளிப்பரப்பு செய்து வரும் சீரியல் பாக்யலட்சுமி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கோபி தான். தன் காதலிக்காக எந்த அளவிற்கு செல்வார் என்ற கதையம்சம் தான் தற்போதைய சீரியலில் நடந்து வருகிறது.
காதலி ராசிகாவிற்காக மனைவி பாக்யாவை விவாகரத்து வரை கூட்டிச்செல்கிறார் கோபி. இந்நிலையில் கோபியை பார்த்து மக்கள் பலர் உண்மையாகவே ஏன் இந்த மனுஷன் இப்படி செய்கிறான் என்று திட்டியும் வருகிறார்கள். சமீபத்தில் இந்த சீரியலுக்காக சிறந்த வில்லன் என்ற விருதினையும் பெற்றுள்ளார் கொபி
தற்போது ஒருமீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலை தாண்டி கோபியாக நடிக்கும் நடிகர் ஒரு விளம்பரத்திலும் நடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் காதலி மற்றும் மனைவியை விட்டுவிட்டு இந்த வேலையும் பார்க்கிறீயா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.