ராதிகா சினிமாவில் அவ்வையார், அதனால் கிழவன் ஆகிட்டேன்.. பப்லு பேச்சால் பரபரப்பு
பப்லு
பப்லு என்று அழைக்கப்படும் நடிகர் ப்ருத்விராஜ் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே மறைந்த கே.பாலசந்தர் இயக்கத்தில் படங்களில் நடித்து ஏராளமாக ரசிகர்களை கவர்ந்தார்.
அப்படியே நடித்துவந்தவர் பின் சின்னத்திரை பக்கம் சென்றார். வாயி ராணி, கண்ணான கண்ணே போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இடையில் நிறைய சர்ச்சைகளிலும் சிக்கி வந்தவர் இப்போது சினிமாவில் படு பிஸியாகிவிட்டார். கடைசியாக பாலிவுட் படமான அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பேச்சால் பரபரப்பு
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் சினிமாவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். எல்லாவிதமான போராட்டம், அவமானங்களையும் பார்த்துவிட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் இது தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.
இதனால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, பணம், சொத்து, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. ஏனென்றால், நடிகை ராதிகா சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கிறார்.
அவர், தமிழ் சினிமாவின் அவ்வையார். அவருக்கு ஜோடி என்றால் நானும் வயதானவனாகதான் இருக்க வேண்டும். அந்த சீரியல் எனக்கு கிழவன் என்ற ஒரு பெயரை வாங்கி கொடுத்தது" என்று தெரிவித்துள்ளார்.