17 வயதிலேயே இப்படியா? அந்த மாறி காட்சியில் நடித்த விக்ரமின் ரீல் மகள்

Vikram
By Dhiviyarajan 1 மாதம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஏ. எல் விஜய் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான "தெய்வ திருமகள்" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபி சாரா. இப்படத்தில் இவர் நடித்திருந்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இதையடுத்து இவர் சைவம், சித்திரையில் நிலா சோறு, விழித்திரு போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன் பின் பேபி சாரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

17 வயதிலேயே இப்படியா? அந்த மாறி காட்சியில் நடித்த விக்ரமின் ரீல் மகள் | Baby Sara Acted In Smoking Scene

வெளியான புகைப்படம்

தற்போது இவர் வித்தியாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 'கொட்டேஷன் கேங்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் பேபி சாரா புகைபிடிக்கும் காட்சியில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இவர் புகைபிடிக்கும் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

17 வயதாகும் பேபி சாரா இது போன்ற காட்சிகளில் நடித்திருப்பதால் சிலர் இதற்கு எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.    

17 வயதிலேயே இப்படியா? அந்த மாறி காட்சியில் நடித்த விக்ரமின் ரீல் மகள் | Baby Sara Acted In Smoking Scene

17 வயதிலேயே இப்படியா? அந்த மாறி காட்சியில் நடித்த விக்ரமின் ரீல் மகள் | Baby Sara Acted In Smoking Scene