ஆரம்பமாகும் பக்தி சூப்பர் சிங்கர்!! முன்னணி பாடகர்கள் பாடிய Anthem பாடல் வீடியோ..
பக்தி சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். ஜூனியர், சீனியர் என்ற இரு பிரிவுகளில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது நடைபெற்று வருகிறது. பக்தி சூப்பர் சிங்கர் இந்நிலையில் விஜய் டிவி வித்தியாசமான ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை துவங்கவுள்ளது. பக்தி சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் பிரமோ சமீபத்தில் விஜய் டிவி வெளியிட்டது.
அப்படி பக்தி சூப்பர் சிங்கர் என்றால் என்ன என்று பிரபல பின்னணி பாடகர்கள் விவரித்திருந்தனர். பக்தி பாடல்களை பாடும் தெய்வீக குரல்களின் தேடலை மையப்படுத்தி தான் இந்நிகழ்ச்சி இருக்கும் என்று கூறியுள்ளனர்.
Anthem
தற்போது பின்னணி பாடகர்கள் பாடிய பக்தி சூப்பர் சிங்கர் Anthem பாடலின் பிரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.