கையில் பெரியாரும் பிள்ளையாரும்.. சூர்யா தூக்கி ஒதுக்கிய பாலாவின் வணங்கான் பட டீசர்!!

Arun Vijay Samuthirakani Suriya Bala Mysskin
By Edward Feb 19, 2024 02:30 PM GMT
Report

முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் பாலா பல ஆண்டுகள் கழித்து சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற படத்தினை இயக்க சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு படத்தையும் ஆரம்பித்தார்.

சூர்யா தயாரிப்பில் பல செட்டுகள் கோடிக்கணக்கில் போட்டு ஆரம்பிக்கப்பட்ட ஷூட்டிங்கில் சூர்யாவுக்கு பாலாவுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யா, பாலா கொடுத்த டார்ச்சரால் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

கையில் பெரியாரும் பிள்ளையாரும்.. சூர்யா தூக்கி ஒதுக்கிய பாலாவின் வணங்கான் பட டீசர்!! | Bala Arun Vijay Vanangan Teaser Viral Youtube

மேலும் படத்தில் கதாநாயகியாக நடித்த கிருத்தி செட்டியில் கால்ஷீட் காரணமாக படத்தில் இருந்து விலகினார். அதன்பின் நடிகர் அருண் விஜய் நடிப்பில் படத்தினை சுரேஷ் காமாட்சி - பாலா தயாரிப்பில் படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது வணங்கான் படத்தின் டீசன் இணையத்தில் வெளியாகியுள்ளது. எப்படி பிதாமகன் விக்ரம் கதாபாத்திரம் இருந்ததோ, அதே தோற்றத்தை பிம்பமாக வைத்து வணங்கான் படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு இருந்துள்ளது.

திருமணமான பிக்பாஸ் பிரபலத்துக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்!! வாழ்த்தும் ரசிகர்கள்

திருமணமான பிக்பாஸ் பிரபலத்துக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்!! வாழ்த்தும் ரசிகர்கள்

டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வணங்கான் டீசரில் கடைசியாக அருண் விஜய் கையில் பெரியாரும், பிள்ளையார் சிலையும் இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.