கழட்டிவிட்ட சூர்யா!! வணங்கான்-க்கு யாரும் இல்லையான்னு பரதேசி ஹீரோவை புக் செய்த பாலா...
சூர்யா பாலா கூட்டணியில் இருந்து நந்தா, பிதாமகன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து புதிதாக இந்த கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும், பாலாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பதாக சில தகவல் வெளிவந்தன.
இயக்குனர் பாலா, நடிகர் சூர்யாவை உச்சி வெயிலில் பல மணி நேரம் ஓடவிட்டதாகவும் கூறினார்கள். இதனால், படப்பிடிப்பில் இருந்து சூர்யா சொல்லாமல் கிளம்பிவிட்டதாக தகவல் வெளியானது.
இதன்பின் பிரச்சனை எல்லாம் முடிவு வந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், ஷாக்கிங் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், நடிகர் சூர்யா வணங்கான் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக இயக்குனர் பாலா கூறியுள்ளார்.
அதர்வா
அதுமட்டுமின்றி இது இருவரும் பேசி சுமுகமாக எடுத்து முடிவு தான் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் வேறொரு புதிய படத்தில் இருவரும் இணைவோம் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் பாலா.
இந்நிலையில் சூர்யா ஒதுங்கிய வணங்கான் படத்தில் அவரின் ரோலுக்கு பாலா ஒரு நடிகரை தேர்வு செய்திருக்கிறார். பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்து அதர்வா தான் வணங்கான் படத்தில் நடிக்கவுள்ளாராம். என்னதான் இருந்தாலும் சூர்யா அளவிற்கு அதர்வாவின் நடிப்பு இருக்குமா என்று சூர்யா ரசிகர்கள் வெச்சு செய்து வருகிறார்கள்.