என் மனைவி வேலைக்காரியா? 4ஆம் திருமணம் செய்து கொண்ட நடிகர் பாலா பதிலடி..

Gossip Today Actors Tamil Actors
By Edward Dec 10, 2024 04:36 AM GMT
Report

நடிகர் பாலா

தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் உடன்பிறந்த தம்பியாவார். 2010ல் பாடகி அம்ருதாவை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். 2016ல் முதல் மனைவியை விவாகரத்து செய்த பாலா, 2021ல் எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் பாலா. இதனை அடுத்து கடந்த சில மாதத்திற்கு முன் கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.

என் மனைவி வேலைக்காரியா? 4ஆம் திருமணம் செய்து கொண்ட நடிகர் பாலா பதிலடி.. | Bala Reacts Strongly Trolls Targeting Wife Kokila

4வதாக திருமணம்

மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன் என்றும் தனது 250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்று அந்த பேட்டியில் கூறியிருந்த பாலா, உறவினர் மகளான கோகிலா என்பவரை 4வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் பாலா திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி மாமாவின் மகள் அல்ல என்றும் அவரது வீட்டில் சேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகள்தான் என்றும் செய்திகள் இடம்பெற்று வந்துள்ளது.

என் மனைவி வேலைக்காரியா? 4ஆம் திருமணம் செய்து கொண்ட நடிகர் பாலா பதிலடி.. | Bala Reacts Strongly Trolls Targeting Wife Kokila

பதிலடி வீடியோ

இதனை அறிந்த நடிகர் பாலா, ஒரு வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், என் மனைவியை எப்படி நீங்கள் வேலைக்காரி என்று நீங்கள் சொல்லலாம். அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? இதே நான் உங்கள் மனைவியை அப்படி சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? என் மனைவியின் தந்தை அரசியலில் பிரபலமான மகள் தான். நான் இதுகுறித்து போலீசில் புகாரளீக்க தயாரானபோது வேண்டாம் விட்டுவிடுங்கள் இதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டார். ஆனாலும் இப்படியொரு செய்தியை பரப்பியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி என்று நடிகர் பாலா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.