அடுத்தவன் காசுன்னா எளக்காரமா! சூர்யாவை கழட்டிவிட்டதால் வெளிச்சத்துக்கு வரும் பாலாவின் சுயரூபம்

Atharvaa Suriya Bala
By Edward Dec 13, 2022 08:48 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட பலவேறு ஹிட் படங்கள் மூலம் பிரபலமானவர் பாலா. பல ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்து சூட்டிங்கை துவங்கினார் பாலா.

இதற்காக சூர்யா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பல கோடி செலவிட்டும் கன்னியாக்குமரியில் ரியலான வீட்டினையை ஷூட்டிங்கிற்காக சூர்யா கட்டினார். ஆனால் அங்கு சூட்டிங் வேண்டாம் என்று பாலா ஒரு குண்டைத்தூக்கி போட சண்டை வலுக்கவும் செய்தது.

இதைதொடர்ந்து கதை விசயத்தில் வேறுமாறி செல்வதால் சூர்யாவுக்கான படம் கிடையாது என்று அவரை கழட்டிவிட்டார். 2டி நிறுவனத்துடன் ஒதுங்கிய சூர்யாவிற்கு இப்படத்தால் பெரிய தொகை நஷ்டம் தான்.

இதனைதொடர்ந்து சூர்யாவுக்கு பதில் அதர்வானை தேர்வு செய்து நடிக்க வைத்து வருகிறார் பாலா. அதேசமயம் தன் தயாரிப்பில் செலவுகள் செய்தும் வணங்கான் படத்தினை எடுத்து வருகிறார்.

சூர்யா பணத்தை வைத்து கோடிக்கணக்கில் பிரம்மாண்டமாக எடுத்து வந்த பாலா, தன் காசு என்றதும் சிக்கனமாக கிள்ளிகிள்ளி பணத்தை செலவு செய்து வருகிறாராம். 10 கோடிக்குள் எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று பாலா திட்டம் தீட்டியும் இருக்கிறார்.

அடுத்தவன் காசு என்றால் இளக்காரமா என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.