லேடி சூப்பர் ஸ்டார் விஷயத்தில் ரஜினியை அலறவிட்ட நடிகை!! நயனை வெளுத்து வாங்கிய பிரபலம்..
லேடி சூப்பர் ஸ்டார்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் கால்பதித்து நடித்து வரும் நடிகை நயன்தாரா, நடிப்பை தாண்டி பல தொழில்களை ஆரம்பித்து இரட்டை குழந்தைகளுக்காக சொத்து சேர்த்து வருகிறார். சமீபகாலமாக அவர் நடந்து கொள்ளும் விதங்களை பார்த்த பலரும் விமர்சித்தும் கலாய்த்து வருகிறார்கள்.
அந்தவகையில், சமீபத்தில் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்றும் நயன் தாராவாகவே இருக்க ஆசை என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். இதுதொடர்பாக பலர் கருத்துக்களை கூறி வந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு விமர்சித்து பேசியுள்ளார்.
விஜயசாந்தி
அதில் நயன் தாராவை யார் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார்கள். இவர்களே போட்டுக்கொள்வார்கள், பின் இவர்களே நீக்குவார்களாம் என்பதுபோல் இருக்கிறது. தமிழில் இதற்கு முன் லேட்டி சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜயசாந்தி தான். மன்னன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தபோது அவர்தான் தன் பெயரை டைட்டில் கார்ட்டில் போடும்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று போடவேண்டும் எனக்கூறினார். ஆனால் இயக்குநர் வாசு மறுத்தார்.
அதன்பின் இந்த பிரச்சனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு தனது பெயருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டமில்லாமல் டைட்டில் கார்ட்டில் போட சொல்லி பிரச்சனையை முடித்துவைத்தார். அப்போது ரஜினிக்கே சவால்விட்ட பொம்பள விஜயசாந்தி. ஆனால் நயன் தாராவை இங்கு யாருமே லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கவில்லை.
அப்படியிருக்கும் போது நயன் தாரா, இப்போது யாரும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார்ன்னு அழைக்க வேண்டாம் என்று கூறியது ரசிகர்கள் மத்தியில்கூட எந்தவிதமான சலசலப்பும் இல்லை. அஜித் தன்னை அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்க வேண்டம் என்று கூறியதும் ரசிகரக்ள் ஆர்ப்பரித்தனர்.
ஆனால் நயன்தாராவுக்கு அதுபோல் எதுவும் ஆகவில்லை. அண்னாத்த படத்தில் அவரே தான் டைட்டில் கார் லேடி சூப்பர் ஸ்டார் என்று போடக்கூறியிருக்கிறார். இங்கு நயன் தாரா என்றால் தெலுங்கில் அனுஷ்கா செட்டியும் காட்டி என்ற படத்தில்லேடி சூப்பர் ஸ்டார் என்று போடச்சொல்லி இருக்கிறார்.