ஆர்த்தி, மாமியாருக்கு பெரிய செக் வைத்த ரவி மோகன்!! நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி..
ரவி மோகன் - ஆர்த்தி ரவி
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம் பற்றித்தான். கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து பெறவுள்ளதாக அறிக்கை வெளியிட்ட ரவி மோகன், அடுத்தடுத்த அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.
அவர் ஒரு பக்கம் இருக்க ஆர்த்தி ரவியும் தன் பக்கத்திற்கு அறிக்கையை வெளியிட்டு வந்தார். இவர்கள் இந்த பிரச்சனை முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து, ஆர்த்தி தன்னுடைய தரப்பில் இருக்கும் நியாயத்தை அறிவித்தும் ரவி மோகன் மீது குற்றம்சாட்டியும் பெரிய அறிக்கையை வெளியிட்டார்.
நீதிமன்றம் தடை
இந்நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆர்த்தி மற்றும் அவரது தாய் சுஜாதா, தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்கக்கோரி ரவி மோகன் மனுதாக்கல் செய்திருந்தார்.
தற்போது இனி ரவி மோகன் - ஆர்த்தி பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடவும், விவாதிக்கவும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதை நீக்கவும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.