விஜய்க்கு குடைச்சல் கொடுக்க துவங்கிய அரசியல் கட்சி.. படத்திற்கு எதிராக நடக்கும் செயல்கள்
தளபதி விஜய் தனது அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கினார். அரசியல் குறித்து தனது படங்களில் அவர் பேசி வந்த நாட்களில் இருந்தே அரசியல் கட்சிகள் மூலம் விஜய்க்கு பல பிரச்சனைகள் வந்தது.
குறிப்பாக தலைவா, சர்கார் மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் வெளிவந்த சமயங்களில் பெரும் பிரச்சனைகள் விஜய்க்கு எதிராக கிளம்பியது. அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பே இப்படி இருந்த நிலையில், தற்போது அரசியல் கட்சியை துவங்கியுள்ளதால் கண்டிப்பாக GOAT படத்திற்கு தமிழகத்தில் அரசியல் கட்சியின் மூலம் குடைச்சல் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது GOAT படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நேரத்தில் படத்திற்கு எதிரான அரசியல் கட்சி ஒன்று செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்கங்களில் விஜய்யின் பேனர்கள் வைக்க முடியாதபடி அதனை அகற்றியுள்ளனர்.
இது அந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது என்பதன் காரணமாக இதனை அகற்றி இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால், மறுபக்கம் இதுவரை எந்த நடிகரின் படத்திற்கு அந்த பேனர்களை அகற்றாமல், விஜய் படத்திற்கு மட்டும் ஏன் இப்படி செய்யவேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#GOAT Banner frames in theaters such as Kasi, Rakki, and Woodlands have been removed by government officials. This action hasn't been taken for any other movie so far this year.
— Monesh (@MoneshMj) August 31, 2024
Just cuz he stepped into politics you guys are doing this ?
But why it’s allowed for all the recent… pic.twitter.com/2EjNOAKSjs