ஹீரோயினை கிழி கிழின்னு கிழிப்பாரு!! பயில்வானை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்..
சினிமாத்துறையில் நடிகர் நடிகைகளின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தையில் விமர்சித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன்.
பல சர்ச்சையான விசயங்களை பேசி வந்தாலும் பயில்வான் ரங்கநாதனை படத்தின் பிரமோஷனுக்காக அவரை பேச அழைத்தும் வருகிறார்கள்.
அந்தவகையில் சமீபத்தில், ரேசர் என்ற படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், சிறு பட தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறதா என்றும் நான் அது இருப்பதாக கேள்விப்பட்டதே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் நாங்களே சென்சார் செய்தோம் என்று படத்தின் தயாரிப்பாளர் கூறியதற்கு, உங்களுக்கு யார் சென்சார் செய்ய அதிகாரம் கொடுத்தது என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்.
மேலும் மேடையில் எழுந்து வந்து பயில்வான் பற்றி பேசிய தயாரிப்பாளர், இவர் எத்தனை சங்கம் இருக்கிறது என்றுகூட தெரியல-ன்னு சொல்றாரு.
இவரு மிகப்பெரிய ஜாம்பவான், நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர், உலகத்தில் இருக்கும் அத்தனை நடிகைகளையும் கிழி கிழி கிழிப்பாரு, அவருக்கு அந்த 7 சங்கம் இருக்கிறது தெரியலன்னு சொல்றாரு என்று கூறி வெளுத்து வாங்கியுள்ளார் அந்த தயாரிப்பாளர்.