அவர் வளராம இருக்க இதான் காரணம்!! மேடையில் ஜெகனை மேடையில் அசிங்கப்படுத்திய பயில்வான் ரங்கநாதன்
சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் எப்படி இருக்கிறது என்று விமர்சனம் கூறியும் யூடியூப் சேனலில் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகராக இருந்தும் பத்திரிக்கையாளராக இருந்துள்ள பயில்வானுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத பயில்வான் சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற படத்தின் ஆடியோ லான்சில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அதில், அவருக்கு முன் பேசிய காமெடி நடிகர் ஜெகன், உங்கள் சேனலை பார்த்து நிறைய தெரிந்து கொள்ள முடியாது, தேவையில்லாததை தான் தெரிந்து கொள்ள முடியும். நான் சொல்வது அறிவியல் பற்றி என்று கலாய்த்து பேசியிருக்கிறார்.
இப்படி பேசியதை கண்டித்து அசிங்கப்படுத்தியபடி கருத்தை கூறியிருக்கிறார். ஜெகன் சொன்ன கருத்தில் நான் மாறுபடுகிறேன். அவரை இந்தியன் 2வில் புகழ்ந்து நல்லா விமர்சனம் செய்திருப்பேன், இப்போது அதை வாப்பஸ் வாங்குகிறேன். என்னை நல்லா விமர்சனம் செய்யவில்லை என்று சொன்னார்.
நடிகர்கள் புகழ்ந்து பாராட்டி பேசினால் கண்டுக்கொள்ளமாட்டார்கள். லேசாக கிள்ளினால் காச்சு மூச்சுன்னு கத்துவார்கள். இந்தியன் 2 படம் நல்லா இல்லை என்றால் நன்றாக இல்லை தான். படத்தை விமர்சிப்பவர்களை தயவு செய்து திட்டார்கள். ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள், நான் அப்படி இல்லை.
பலர் நீங்கள் தான் இந்த படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார்கள். அதில் ஜெகன் வித்தியாசப்பட்டார். அதனால் தான் அவர் ஏன், எதுக்கு அடுத்தக்கட்டத்திற்கு செல்லவில்லை என்று தெரிகிறது. என்னை மட்டும் அப்படி விமர்சித்து பேசவில்லை, விமர்சிப்பவர்களையும் பேசியிருக்கிறீர்கள், அப்படி பேசாதீர்கள் என்று சர்ச்சையாக பேசியிருக்கிறார்.