தன்னை ஒரு கற்புக்கரசியா காட்டிக்கிறாங்க!! ரச்சிதாவை படுகேவலமாக பேசிய பயில்வான்!!
விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ராம் மற்றும் ஆயிஷா பிக்பாஸ் வீட்டினைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்தவாரமும் யார் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று நெட்டிசன்கள் யூகித்து வருகிறார்கள். அந்தவகையில், சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பயில்வான் விமர்சித்து பேசியுள்ள வீடியோ வைரலானது.
அதில், ரச்சிதா மகாலட்சுமியை தன்னை விமர்சித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. ராஜாங்கம் எபிசோட்டில் கேரக்டாராக மாறியது அமுதவானன், ரச்சிதா, மைனா நந்தினி, ராம் போன்றவர்கள் நன்றாக செய்தார்கள்.
ஆனால் ரச்சிதா சரோஜா தேவியாக சிறப்பாக செய்தார்கள். அதில் ஆண்களை மேடையில் ஏற்றாமல் தன்னை கற்புக்கரசியாக காட்டிக்கொள்கிறார்கள்.
சீரியலில் மட்டும் தான் ஹீரோக்களுடன் நெருக்கமாக காட்டுவேன் என்று நினைத்து இங்கே ஆண்களை நெருங்கவிடாமல் தடுத்து வருகிறார் என்று விமர்சித்துள்ளார் பயில்வான்.