பிரியா பவானி சங்கரை ஏமாற்றிவிட்டாரா ஆசைக் காதலன்!! உண்மையை கூறிய பயில்வான்..
தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியலில் இருந்து கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக நடித்து, அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் பங்களா கட்டி காதலருடன் குடியேறினார். அதன்பின் கடற்கரை பகுதிக்கு அருகில் ஒரு ரெஸ்டாரெண்ட் ஒன்றினை ஆரம்பித்தும் இருக்கிறார். இதற்கிடையில் தன்னை சிலர் ஏமாற்றிவிட்டதாக பிரியா பவானி சங்கர் கூறியிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், காதலரை வெளிச்சம் போட்டு காட்டியதோடு ஈசிஆர் ரோட்டில் பங்களா கட்டி காதலருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்.
ஆனால் மோகம் 30 நாள் சொல்வதை போல, பிரியா பவானி சங்கரின் காதலர் சரியாக இல்லை என்றும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பயில்வான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவரின் தோழிகளிடம் என்னுடைய காதலர் என்னை ஏமாற்றிவிட்டார். நான் நினைத்தது போல் அவர் இல்லை என்று பகிர்ந்துள்ளாராம் பிரியா பவானி சங்கர்.

சினிமாவில், கதாநாயகி என்றால் நடிகருடன் நெருக்கமாக நடிக்க வேண்டுன். வெளியூரில் தங்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் அவரின் காதலர். தொடர்ந்து பிரியா பவானி சங்கர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் திருமணத்திற்கு பின் அதை தொடரவும் ஆசைப்பட்டுள்ளார். இது அவரின் காதலருக்கு பிடிக்கவில்லை என்றும் சில கண்டீசன் போட்டிருக்கலாம் என்றும் தெரியவில்லை.
அதற்கு பிரியா பவானி சங்கர் மறுத்து இருக்கலாம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும் 5 வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரியா பவானி சங்கர் கூறியதால் அவரின் காதலருடன் பிரேக் கப் ஏற்பட்டிருக்கிறது என பயில்வான் தெரிவித்துள்ளார்.
