1000 முத்தத்தை எண்ணிட்டா இருந்தாங்க..வஹிதா - முத்துக்குமரனை விளாசிய பயில்வான்..
பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி வஹிதா என்ற பெண் தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முத்துக்குமரனுடன் இருந்த வீடியோக்களை அடுத்தடுத்த இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் வஹிதாவிற்கு பலரும் ஆதரவளித்து வருகிறார்கள். பலரும் முத்துக்குமரனின் லீலைகளை கண்டு விமர்சித்து கண்டபடி திட்டியும் வருகிறார்கள்.

தற்போது பயில்வான் ரங்கநாதன் முத்துக்குமரனை விமர்சித்து பேசியுள்ளார்.
அதில், முத்துக்குமரன் ஒரு சிறந்த சொற்பொழிவாளர். மேடைகளில் எல்லா விஷயங்களையும் அழகாக பேசக்கூடியவர். ஆனால் ஊருக்குத்தான் உபதேசம், தனக்கு இல்லை என்பது போலத்தான் இவரது செயல் அமைந்திருக்கிறது. பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் வந்ததாக தெரியவில்லை. இவர் மேலத்தான் வஹிதா என்ற பெண் புகாரளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக சொல்லி உடலுறவு வைத்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று வீடியோவில் கூறியுள்ளார்.
பாலச்சந்தர் படத்தில் வருவதைப்போல் அப்பெண் ஒவ்வொரு தூக்க மாத்திரையாக எடுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவில், முத்துக்குமரன் தனக்கு ஆயிரம் முத்தங்கள் கொடுத்ததாக வஹிதா கூறியிருந்தார். உணர்ச்சிவசப்பட்ட அந்நேரத்தில் கூடவா அந்த பொண்ணு முத்தங்களை கணக்கிட்டு கொண்டிருந்தாரா? என்று எனக்கு கேட்க தோணுது.

பெண்களை தங்களின் அழகான பேச்சால் வசியப்படுத்துவதற்காக பல ஆண்கள் சுற்றித் திரிகிறார்கள். பிக்பாஸ் வின்னர், அழகாக இருக்கிறான், சொத்து இருக்கிறது என்று ஆசை வார்த்தைகளை நம்பி, காதல் வலையில் விழாதீர்கள். காதலிப்பது தவறில்லை, ஆனால் திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது மிகப்பெரிய சிக்கல்களை கொண்டு வரும் என்பதை பெண்கள் மறந்துவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயில்வான் பேசியுள்ளார்.