நடிகை ஆணுறை பற்றி பேசலாம் நான் பேசக்கூடாதா? சர்ச்சையை கிளப்பிய பயில்வான்..

Nidhhi Agerwal
By Edward May 19, 2022 04:30 PM GMT
Edward

Edward

Report

தற்போதைய சினிமா வட்டாரத்தில் சர்ச்சைக்கு பேர் போனவராக திகழ்ந்து வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

சினிமா நட்சத்திரங்கள் அல்லாது பிரபலங்களின் அந்தரங்க செய்திகளை கூறுகிறேன் என்ற போர்வையில் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அப்படி சமீபத்தில் இளம் நடிகை நடிகர்கள் முதல் மறைந்த நடிகர் நடிகைகள் வரை என்ன செய்தார்கள் இப்போது எதை மறைக்கிறார்கள் என்பது வரை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் நடிகை நித்தி அகர்வால் ஆணுறை பற்றிய விளம்பரத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.

அந்த விளம்பரத்தில் உடலுறவு செய்யும் பெண்களுக்கு ஆணுறை என்பது அவசியமானதாகும். கண்டிப்பாக இதனை பயன்படுத்துங்கள் என்று கூறி வீடியோவை வெளியிட்டார்.

இதனை கண்ட பயில்வான் சமீபத்தில் கலந்து கொண்டு பேசிய யூடியூப் வீடியோவில், நித்தி அகர்வால் ஆணுறை பற்ரிய விசயங்களை சொன்னால் சரி, அதையே நான் சொன்னால் தவறா? என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.