ரஜினி மகளை நம்பி வாழ்க்கையை தொலைத்த பிரபலம்.. 6 மாத ஜெயில் தண்டனை!

Rajinikanth Tamil Cinema Aishwarya Rajinikanth Jailer Soundarya Rajinikanth
By Dhiviyarajan Aug 13, 2023 06:49 AM GMT
Report

கோச்சடையான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் படு மோசமான விமர்சனமே கொடுத்தனார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், சௌந்தர்யா ரஜினியிடம் நவீன 3d தொழிநுட்பத்தில் உருவாகும் கோச்சடையான் நடிக்க ரஜினியை வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார். கோச்சடையான் படத்தின் பட்ஜெட் அதிகமாக சென்றதால் படத்தை எடுத்த வரை அப்படியே ரீலிஸ் பண்ணிவிடுங்க என்று ரஜினி கூறி இருக்கிறார்.

இப்படத்திற்கு பின் இனி மகள் பேச்சை கேட்க கூடாது என்று ரஜினி முடிவு எடுத்துள்ளார். இது குறித்து அவரே காலா ஆடியோ லாஞ்சில் பேசி இருப்பார்.

கோச்சடையான் படத்தை தயாரித்தவர் முரளி மனோகர் என்பவர். இவர் வெளிநாட்டு தமிழர். இப்படத்திற்கு அபிநந்த் சாகர் என்பவர் 5 கோடி ரூபாய் கண்டனாக முரளி மனோகரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை முரளி மனோகரால் திருப்பி செலுத்த முடியவில்லையாம்.

இதையடுத்து அபிநந்த் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தீர்ப்பில் முரளி மனோகர் வட்டியுடன் 7 கோடி தர வேண்டும் என்றும் 6 மாதம் சிறை சண்டை என்றும் கூறியுள்ளனர். இந்த நிலைமையில் இருக்கும் முரளி மனோகருக்கு ரஜினி உதவி செய்யலாம் என்று பயில்வான் பேசியுள்ளார்.